கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday 30 December 2014

ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை நிலைமை


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
” பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய
கடமையை ( ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக
நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவரு டைய
விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை
குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக)
மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு
நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய
செர்க்கத்தின் பாதையை , அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Sunday 28 December 2014

அழகிய சொல்லாடல்

எனதருமைச் சிறார்களே, பள்ளிப் படிப்புகளுக்கும், விளையாட்டுச் சுட்டித்தனத்திற்கும் பஞ்சமில்லாமல் சிட்டாய் பறந்தோடும் இந்த வேளையில் உங்களால்
மொழியப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் நம்மைப் பற்றிய முழு அபிப்ராயங்களையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்வது நமது நாவு தான். நம்மோடு சிலர் நெருங்கிப் பழகுவதற்கும் விரண்டோடுவதற்கும் அடிப்படையான விஷயம் நமது பேச்சு தான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

Tuesday 23 December 2014

மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!

மனித வாழ்வென்பது பல உலகங்களோடு தொடர்புடையது.

ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகத்தில் துவங்கி, பின்னர் ஆலமுல் அர்ஹாம் எனும் தாயின் கருவறை, பின்னர் ஆலமுத்துன்யா எனும் நாம் காணும் இந்த உலகம், பின்னர் ஆலமுல் பர்ஸக் எனும் மர்மங்கள் பல நிறைந்த மண்ணறை உலகம், பின்னர் ஆலமுல் ஹஷ்ர் எனும் ஒன்று திரட்டப்படும் உலகம், பின்னர் நன்மை, தீமை அடிப்படையில் சுவனம், நரகம் என்று தீர்ப்பளிக்கப்படுகிற ஆலமுல் ஹிஸாப் வரை தொடர்கிறது.

அல்லாஹ் எங்கிருந்து மனித வாழ்வை தீர்மானித்தானோ இறுதியாக அங்கேயே அவனுடைய சகாப்தத்தை நிறைவு செய்கிறான்.

Saturday 20 December 2014

ஆன்மீகம்

ஆன்மீகம்
ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

பொற்காசுகள் [சிறுகதை ]

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான்.  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.

Wednesday 17 December 2014

கஞ்சா வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் [சிறுகதை]

முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக
இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும்
முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம்
கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம்
தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.

கஞ்சா மகா பிரபு [சிறுகதை]

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான
செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில்
அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

புத்தி பலம் [சிறுகதை ]

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல்
வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக
இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால்,
பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை
மிஞ்ச யாராலும் முடியாது.

Monday 8 December 2014

நெகிழ்வூட்டும்அறிவுரைகள்


6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.

6413. அனஸ்(ரலி) அறிவித்தார்.  (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!“ என்று (பாடியபடி) சொன்னார்கள். 3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.

Friday 5 December 2014

மூன்று பேர்கள் [சோதனை]

5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே,

Monday 1 December 2014

பிச்சைக்காரனும் தங்க நாணயங்களும்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.