கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 February 2015

பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே

ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக்கொண்டிருக்கும்பொழுது
வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய
நடை பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையும்
,காலனியும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம் அந்த
ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாகஇருக்கும் என்றான்.

Thursday 26 February 2015

நபிகள் [ஸல்] நாயகத்தின் நன்மொழிகள்

நபிகள் [ஸல்] நாயகத்தின் நன்மொழிகள்

*பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.

*உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான். பெற்றோரை வேதனை செய்பவன், எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.

Monday 23 February 2015

நட்புக்குத் துரோகம் [சிறுகதை]

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத்
தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.

நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும்,
இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை
விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின்
மூலம் உறுதி செய்து கொண்டன.

அதிஷ்ட்டம் [சிறுகதை]

இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர்
மூன்றாம் ஜார்ஜ்.

ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா,
சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு
ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து
ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில்
கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.

கடவுளின் கணக்கு [சிறு கதை ]

சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால்
சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம்
கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம்
கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.

Saturday 21 February 2015

உமர்[ரலி] அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதம்

ஒரு நண்பர் அல்லது உறவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால். அவரை பகைத்துக்
கொள்ளாமலும். முடிந்தவரை தாஜா செய்து மிகைப்படுத்தி புகழ்ந்து தமது சொந்த
காரியங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இன்றைய மக்களை பார்க்கிறோம். ஆனால்
அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் இத்தகைய
பண்பு சுத்தமாக இருக்கவிலை. எனென்றால் அவர்கள் சுத்தமான சத்தியவான்களாக
இருந்தார்கள். நேர்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழிக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள்.

Wednesday 18 February 2015

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஒர் அறிமுகம்

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஒர் அறிமுகம்

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம்
அரைப்பகுதியில் பிறந்தவர்.(பிறப்பு ஹி.661(கி.பி.1262) அன்றைய
காலகட்டத்தில் இஸ்லாத்தில் படிந்திருந்த எல்லா மாசுகளையும் அகற்றி,அதன்
வாழ்க்கை முறையில் நுழைந்திருந்த தீமைகளை நீக்கி அதனைத் தூய உருவில்
உலகுக்கு எடுத்துக் காட்டினார்.

அவர் தம் விமரிசனங்களில் சிறியவரோ,பெரியவரோ-யார் மீதும் தயவுதாட்சண்யம்
காட்டவில்லை மக்களின் மரியாதைக்கும் பக்திக்கும் உரியவர்கள்கூட இமாம்
அவர்களின் கண்டனத்திலிருந்து தப்ப முடியவில்லை.பல நூற்றாண்டு காலமாக
இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமய ஆங்கீகாரம்
பெறப்பட்டு ஆலிம்களும் பொருட்படுத்தாத நிலையில் சமூகத்தில் நிலவிய தவறான
பழக்கவழக்கங்களை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மிகக் கடுமையாக
சாடினார்.