கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 March 2015

அறிவே ஆயிதம் [சிறுகதை]

ராமுவும், சோமுவும் நண்பர்கள். பக்கத்து நகரத்தில் நடந்த திருவிழாவுக்கு புறப்பட்டுப் போனார்கள்.

சோமு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தான். ராமு திருவிழா கூட்டத்தில் வியாபாரம் செய்ய சென்றான். வணிகம் செய்யத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நிறைய பணத்தை, பொட்டலமாக கட்டி எடுத்துச் சென்றான் ராமு.

உபதேசம் [சிறுகதை]

பரம குருவிடம் பாடம் பயில சீடர்கள் குருகுலத்தில் சேர்ந்திருந்தனர்.

இவர்களோடு மன்னர் மகன் மாமல்லனும் படித்து வந்தான். மன்னர் மகன் என்பதால் நிறைய குறும்புகள் செய்வான்.

குரு எவ்வளவு எச்சரித்தும் அவன் தன் குறும்பை விடவில்லை.

அச்சம் தவிர் [சிறுகதை ]

கிள்ளியும், வளவனும் மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள். அன்று பள்ளியில் விழா. வழக்கத்தை விட தாமதமாக பள்ளி முடிந்து காட்டு வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

“கிள்ளி, விளையாட்டு விழாவால் நேரமாகிவிட்டது. இருள் வேறு சூழ்ந்து வருகிறது. எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் வளவன்.

Monday 16 March 2015

கற்றுக் கொண்ட பாடம்

மன்னனுக்கு திடீரென ஒரு ஆசை. சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து
சென்றால் எத்தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்து
கொள்ள ஆசை.

உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு தனது மெய்க் காப்பாளனை உடன் அழைத்துக்
கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார். மெய்க்காப்பாளன் முன்னே செல்ல
சிறிது இடைவெளியில் மன்னர் பின்னே நடந்து சென்றார்.

வீதியில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக் கண்டு புன் முறுவல்
பூத்தவாறு சென்றனர். மன்னனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. மன்னனுக்கு
மெய்க் காப்பாளனுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்சரியம்,
மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான
கோபம்.அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார், ''என்ன உனக்கு நாட்டில்
எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே, அவ்வளவு செல்வாக்கா,உனக்கு?''

அவன் சொன்னான், ''மன்னா,எனக்கு இவர்கள் யாரையும் முன்னேபின்னே
தெரியாது.''   மன்னன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து அவன்
சொன்னான்.   ''மன்னா, நான் சாலையில் நடக்கும்போது எதிரில் வரும் யாரைப்
பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன்.
அப்போது எதிரில் வருபவன் எப்படிப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு
கட்டாயம் புன்முறுவல் பூப்பான். இப்போதும் அப்படித்தான் நடந்தது.
''மன்னன் அன்று தனது மெய்க் காப்பாளனிடம் நல்லதொரு பாடம் கற்றுக்
கொண்டான்.   அதுபோலவே நாமும் ... :)
கற்றுக் கொண்ட பாடம் 

Sunday 8 March 2015

உங்கள் பிள்ளைகள் பத்திரம்

உங்கள் பிள்ளைகள் பத்திரம் 
அல்லாஹ் நமக்கு அள்ளிக்கொடுத்த செல்வங்களில் மிக முக்கியமான ஒன்று
பிள்ளைச் செல்வம். எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திறமைமிக்க
பிள்ளைகளாக வளர்ந்து சமூகத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும் என்று தான்
நினைப்பார்கள். ஆனாலும் சில பிள்ளைகள் வழிதவறி தவறான வழிகாட்டுதலில்
சென்று சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் மாறான பாதையில் சென்று
விடுகிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்கள் என்று மட்டும் சொல்லி விட
முடியாது. வளரும் சூழ்நிலை, சமுதாயத்தில் நடக்கும் விஷயங்கள்,
தொழில்நுட்பம், பிறரைப் பார்த்து பழகுவது என நிறைய காரணங்கள் உள்ளன.

Tuesday 3 March 2015

மௌனமாய் ஒரு வெற்றி

மௌனமாய் ஒரு வெற்றி


வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.
இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு
இறங்கினான்.குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டினான். அது உண்பதற்காகப்
புல் போட்டுவிட்டு சத்திரத்திற்குள் நுழைந்தான். அப்பொழுது அங்கிருந்த
குறும்பன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.இதைப்
பார்த்த அவன், “தம்பி இது முரட்டுக் குதிரை. வால் முடியைப் பிடித்து
இழுக்காதே உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும்” என்று எச்சரித்து
விட்டு உள்ளே சென்றான்.ஆனால் அந்தக் குறும்பன் இந்த எச்சரிக்கையை
சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் குதிரையின் வால் முடியைப்
பிடித்து இழுத்தான்.குதிரையால் வலியைப் பொறுக்க முடியவில்லை. விட்டது ஒரு
உதை. அவன் நான்கைந்து குட்டிக்கரணங்கள் போட்டு சிறிது தொலைவில்
விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு அல்லாமல் நல்ல காயமும் அவனுக்கு
ஏற்பட்டது.