இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும்

குடும்பம் என்பது ஒரு மனித சமூகக் கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பி னர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பனவற்றால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உரிமைகளும் கடமைகளும் மதத்தினால் ஏற்படுத்தப்பட்டு சட்டத்தினால் அமுல் நடத்தப்பட்டு குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களினால் கடைப்பிடிக் கப்பட்டிருக்கின்றன.

குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், பரஸ்பரம் அன்பு பாராட்டுதல், இளைஞர்களிடம் அன்பு காட்டுதல், முதியவர்களுக்கு மரியாதை செய்தல், குடும்பம் சுமுகமாக நடத்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளாகும்.


இரத்த பந்தங்களின் மூலம் ஏற்படும் குடும்பப் பிணைப்புகளைப் போல் இயற்கையான குடும்பப் பிணைப்புகள் எதுவுமில்லை எனக் கூறுகிறது இஸ்லாம். மனிதன் தன் உடலில் இயற்கையாக எழும் உணர்ச்சிகளைத் தணித்திட முறையான ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. ஒழுக்கம், உடல் திருப்தி இவை இரண்டுக்கும் வகை செய்யும் வகையிலேயே இஸ்லாம் திருமணத்தை நோக்குகிறது.

திருமணம் சமுதாய தேவை என்பது இஸ்லாத்தின் கண்ணோட்டமாகும். திருமணம் இஸ்லாம் பேணும் பண்புகளுள் ஒன்றாகும். மனிதன் ஒழுக்க நெறிகளிலிருந்து சீரழிந்து விடாமல் காத்திடும் அரண்.

ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்கின்ற விதத்திலேதான் தன்னுடைய வாழ்வின் போக்கை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் அவன் தன் மார்க்கத்தில் அரைப் பகுதியை நிறைவு செய்துவிட்டவன் போலாவான்’ (மிஸ்ஹாத்)

திருமணம் என்பது தம்பதிகள் தங்களுக்குள் செய்து கொள்கின்ற ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் மட்டுமல்ல, அது தம்பதிகள் இறைவனுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமுமாகும். வாழ்க்கை ஒப்பந்தத்தில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த ஒப்பந்தம் நீடித்திருக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

பக்குவமான வயது, பொதுவான பொருத்தங்கள், நியாயமான திருமண மஹர், நிர்ப்பந்தம் எதுவுமின்றி சுதந்திரமாகத் தரப்படும் சம்மதம், எண்ணத் தூய்மை ஆகியவைகளுக்கு அதிக கவனம் செலுத்திட வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது. இதயச் சுத்தி இல்லற வாழ்வில் இன்பத்திற்கு இன்றியமையாதது.

மனைவியை அன்புடனும், அனுதாபத்துடனும், கண்ணியத்துடனும் நடத்திட வேண்டியது கணவனின் கடமையாகும். இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘பெண்களின் நிருவாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் ஒருவரை விட மற்றவரே அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பொருள்களைப் பெண்களுக்காகச் செலவிடுகின்றனர்.

ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும், தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவன் மறைவாக உள்ள சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புகின்றவற்றை (தங்களையும், தங்களின் கணவனின் ஏனைய பொருட்களையும்) பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள்.

(4 : 34)’

கணவன் மாணவியின் பராமரிப்புக்குத் தேவையானவை அனைத்தையும் தந்திட வேண்டும் என்பதாகும். இக்கடமையை ஆண்கள் கடுகளவு கசப்புமின்றி நிறைவேற்றிட வேண்டும். மேலும் மனைவியின் குறைகளைக் கண்டு சீறி விழாமல் சகிப்புத் தன்மையும், மெளனத்தையும் கையாள வேண்டும். ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும். நிதானம் இழக்கக்கூடாது.

மனைவியின் கடமைகளை நோக்கித் தமது கடமைகளை நிறைவேற்றுகின்ற விதத்தில் மனைவி நம்பிக்கையுடை யவர்களாகவும், கண்ணியமும், நேர்மையும் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவள் தனது இல்லத்தில் தகுந்த காரணமின்றி வேற்று ஆண்களை அனுமதிக்கக் கூடாது.

அது போலவே தன் கணவனின் அனுமதியின்றி அடுத்தவர்கள் தரும் பரிசுகளை ஏற்றிடக் கூடாது. இன்னும் கணவனுக்குச் சொந்தமானவைகளும், குடும்பச் சொத்துக்களும் கணவன், மனைவியிடத்தில் ஒப்படைத்திருக்கும் அமானிதப் பொருட்களாகும். அவை அனைத்தையும் அவன் பொறுப்போடு பேணிக் காத்திட வேண்டும்.

கணவன் மனைவியிடத்தில் ஒப்படைக்கப்படும் தனது சம்பாத்தி யங்களைச் செலவிடுவதில் மனைவி விரயம் செய்யாதிருத்தல் வேண்டும். கணவனின் அனுமதியின்றி, கணவனின் பொருட்கள் எதனையும் கடனாகத் தரவோ விலை பேசவோ கூடாது.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் அணுகுமுறையில் சில கொள்கைகள் உள்ளன. முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.

இரண்டாவது பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது. மூன்றாவது வாழ்வதற்குரிய உரிமைகளையும் வாய்ப்புக்களையும் சுதந்திரமாகப் பயன்படுத்த உதவுதல் போன்றன இவற்றுள் அடங்கும். முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களைவிடப் பிள்ளைகளிடத்தில் அதிக அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது.

குழந்தைகளின் ஆன்மீக உயர்வுக்கு வழி தேடுவதும், அவர்கள் வாழ்வில் வளம்பெற வழிகாட்டுவதும் நற் செயல்களின் தலையானவைகளாகும். பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு மார்க்கக் கடமைகளைக் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ‘ஒரு தந்தை தனது குழந்தைக்கு விட்டுச் செல்லும் நன்கொடைகளுள் சிறந்தது ஒழுக்கத்தைக் கற்பித்துச் செல்வதைவிட மேலானது எதுவும் கிடையாது’ (திர்மிதி)

பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளும் காணப்படுகின்றன. பெற்றோர்கள், வயதில் முதிர்ந்தவர்கள் அனுபவத்தில் தேர்ந்தவர்கள் எனினும் அவர்கள் கருத் துக்கள் அனைத்தும் ஏற்புடையவர்களாக மாட்டாது.

பெற்றோர்களிடம் பிள்ளைகள் காட்டி வரும் பணிவு பிள்ளைகளை இறைவனிடமிருந்து பிரித்து வெகு தூரம் கொண்டு சென்றிட நிர்ப்பந்திக்கு மேயானால் பிள்ளைகள் இறைவனின் பக்கமே சாய வேண்டும். பெற்றோர்களிடம் பிள்ளைகள் அன்புடனும், பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது உண்மையே. அவர்களின் தள்ளாத நிலையில் அவர்களைக் காத்திட வேண்டியது பிள்ளைகளின் கடமையே.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குப் பல நன்மைகளைச் செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் ஆளாகிய பின்னரும் பெற்றோர்களுக்குப் பணிந்து நடந்திட வேண்டியது கடமையாகும். இவை பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

‘உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாது என்றும் பெற் றோருக்கு உபகாரம் செய்ய வேண் டுமென்றும் கட்டளையிட்டிருக்கின் றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத் தில் திண்ணமாக ஷிஜி(தி(கி அடை ந்துவிட்டால் அவ்விருவருக்கும் சீ என்றுகூட நீ சொல்ல வேண்டாம். உம்மிடமிருந்து அவ்விருவரையும் விரட் டிவிடவும் வேண்டாம். அவ் விருவருக்கும் மரியாதையான வார் த்தைகளைக் கூறுவீராக.’ (17 : 23)

குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுட னும், உறவினர்களுடனும் மிக்க கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது சுவர்க்கத்தை எட்டிப்பிடிப்பதற்குக் கிடைத்த அரிய வழியாகும்.இறைவன் காட்டியுள்ள பாதையில் நடந்திடாதவர்களுக்கு இவ்வழி அடைப்பட்டுப் போகும்.

உறவினர்களுடன் பாசமுடன் நடந்து கொள்வது ஒருவரது உயிருக்கும் உடமைக்கும் கிடைத்த இறைவனின் அருளாகும். நாம் காட்டும் பாசம் பிரிவு இவைகளுக்கு உறவினர்கள் நன்றியுடன் நடந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் நாம் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் நம்மிடம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் தம்மைத் தாக்கிடக் கூடாது. உறவினர்களிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டியது இறைவன் நம்மீது பணித்த கடமையாகும். ஆகவே அதை அவனுக்காகவே நிறைவேற்ற வேண்டும். இதில் உறவினர்களின் நன்றியை எதிர்பார்த்தல் கூடாது. அவர்கள் தம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்திடல் ஆகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘பதிலுக்குப் பதில் செய்வோன் உறவு பேணுவோம் அல்லன். தன் உறவை மற்றவன் பேணாவிடினும் தான் பேணி நடப்பவனே உறவு பேணுவோன்’ (புகாரி)

அண்டை வீட்டில் வாழ்வோருக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளும், உயர்வும் மகத்தானவை. அண்டை வீட்டில் வாழ்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எண்ணற்ற சிறப்பான உரிமைகளுக்குரியவர்களாவர். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

‘யாருடைய அண்டை வீட்டார் அவரிடமிருந்து பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அண்டை வீட்டார் இரவெல்லாம் பட்டியினில் வாடும் போது தான் மட்டும் வயிறார உண்டு களிப்பவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார்.

தன்னுடைய அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

‘வானவர் ஜிப்ரீஸ் (அலை) அவர்கள் அண்டை வீட்டாரினது உரிமைகள் பற்றி நபி அவர்களிடம் கூறிடும் போது ‘அண்டை வீட்டாருக்கும் சொத்துரிமை விதிக்கப்படும் என்று நான் நினைத்திருக்கும் அளவுக்கு அயலாரின் விடயத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (திர்மிதி)

எனவே இஸ்லாமியக் குடும்பம் என்பது கருணை, அன்பு, புரிந்துகொள்ளும் மனப்பான்மை, உளக் கட்டுப்பாடு, ஒத்துழைப்பு, கூட்டுறவு ஆகிய பண்புகளை ஒருவனில் வளர்க்கும் கலைக்கூடமாகும். பரஸ்பரக் கடமைகளிலும், பொறுப் புக்களிலும் பயிற்சியளிக்கும் பயிற்சிக் கூடமாகும். உண்மையில் கூறப்போனால் குடும்பம் என்ற நிறுவனம் அதில் அங்கம் வகிக்கும் ஒருவனைப் பரந்த சமுதாய வாழ்வில் பங்குபற்றத் தகுதியுடையவனாகக் கட்டியெழுப்புகின்றது.
நன்றி..dawahworld .com
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும் 

Comments