கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 1 January 2015

அயல் வீட்டாருடன் நபியவர்களின் கனிவு

நபியவர்களின் அயல் வீட்டார்கள் நபியவர்களை கண்ணியப்படுத்தினார்கள். அவ் அயல் வீட்டார் பற்றி நபியவர்களிடத்தில் பெரும் மதிப்பே இருந்தது. “அயல் வீட்டாரை வாரிசாக்கிவிடுவார்களோ என நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், அயலவரைப் பற்றி உபதேசிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் அபூதர் (ரழி) அவர்களுக்கு உபதேசிக்கும் போது, அபூதரே! நீர் கறி, ஆணம் சமைத்தால் தண்ணீரை அதிகமாக வைத்து, அயல் வீட்டாருக்கும் கொடுத்துண்ணு! எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
அயல் வீட்டார் நோவினைக்குள்ளாவதையும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். ‘எவரது அயல் வீட்டார் தனது நோவினையிலிருந்து அச்சமற்று இருக்கவில்லையோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான். (நூல்: முஸ்லிம்)
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர், அவரது அயலவருக்கு நல்லது செய்யட்டும்’ என நபியவர்கள் அயலவர் பற்றி வாழ்த்துக் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)
அயல் வீட்டாருடன் சிறந்த நல்லுறவை வளர்த்துக் கொள்ள பல அழகிய முன்மாதிரிகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இச்சமூகத்தினருக்கு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல தன் வாழ்க்கையை உரிய முறையில் உரிமைகளை வழங்கி வாழ்ந்தும் காட்டினார்கள். சொல்லால், செயலால், நடத்தையினால் நோவினைகள் பல கொடுத்துக் கொண்டிருக்கும் நம்மவர்கள் இவற்றைப் பற்றி தங்கள் சிந்தனைக்கு எடுப்பார்களாக!
நபியவர்கள் தன்னிடம் எடுத்துக் கொண்ட தனிப்பெரும் சிறப்புக்களில் ஒன்றுதான் மற்றவர்களுடன் கனிவுடன், இரக்கத்துடன் நடந்து கொள்ளும் பக்குவம். ஒரு மனிதரின் தவறுகள் பற்றி நபியவர்களுக்கு தெரியவந்தால், ‘இன்னாருக்கு என்ன நடந்தது எனக் கூறாது, ஒரு கூட்டத்திற்கு என்ன நடந்தது? அவர்கள் இவ்வாறெல்லாம் சொல்கிறார்களே! எனக் கூறுவார்கள் என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி)
யாரிடமாவது நபியவர்கள் வெறுக்கும் ஒன்று இருந்தால் அவரை எதிர்கொள்வது மிகவும் குறைவாகவே இருக்கும். நபியவர்களிடம் ஒருவர் வந்தார். அவர் மீது மஞ்சள் அடையாளம் இருந்தது. அம்மனிதர் வெளியே சென்ற வேளையில், அங்கு இருந்தவர்களிடம் ‘இவர் அந்த மஞ்சள் அடையாளத்தைக் கழுவிக் கொள்ளப்ப் பணித்தால்? (அவர் கழுவி விடுவாரே) எனக் கூறினார்கள். (நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்)
“நரகம் யாருக்கு ஹறாமாகும்?’ என்பதைப்பற்றி அறிவிக்கட்டுமா? என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்டுவிட்டு, ‘மிருதுவான, கனிவான, மென்மையான, நயமான, நெருக்கமுள்ள ஒவ்வொருவர் மீதும் ஹறாமாகும்” என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி)
மனித உள்ளங்களை காயப்படுத்துகின்ற கடுமையான, உரத்த சொற்பிரயோகங்கள் உறவுகளை சிதைத்துவிடும். சமூகத்தில் ஒரு அடையாளத்தை இனங்காட்டும், பெற்றோருடன், மனைவி, பிள்ளைகளுடன் ஒன்றாகத் தொழில் புரிகின்ற சக ஊழியர்களுடன் மென்மையாக, கனிவாக நடந்து கொள்வது எம் சிறப்பியல்பை இச்சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
நன்றி ..dawahworld .com 
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாகா !!!!!!!!!

No comments:

Post a Comment