கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Sunday 11 January 2015

இத்தனை சாக்குப் போக்குகளா ?

“தாத்தா புஷ்ராவோட சிறுநீர் உடுப்புல பட்டிருக்கின்றதே; அது நஜீஸ்….”


“ம்…. தெரியும். அதனால தான் இப்ப நான் தொழுவுறது இல்ல.”

“வாப்பா இஷாத் தொழுகைக்கு அதான் சொல்லப் போறாங்க. மஃக்ரிப் தொழப் போங்களேன்…”

“ஆ…. மகளே… இப்பதான் வேலை முடிஞ்சு வந்தேன்… பிறகு குளிச்சுட்டு
இரண்டையும் சேர்த்து தொழுவோம்…”

“தம்பி… தொழப் போங்களேன்… உங்களுக்கு எத்தனை வயசாகுது; இன்னும்
சின்னப்புள்ளன்னு நினைப்பா…?”


“அதான் சொல்லியாச்சு. போங்களேன் அவசரமா…. தொழாட்டி என்ன பாவம்னு தெரியும்தானே…?”

“சரி… சரி… போறேன்… இன்னைக்கி இல்ல. நாளையில இருந்து; முதல்ல இருந்து
தொழுறேன் போதுமா...?”

“உம்மா ழுஹருக்கு அதான் சொல்லியாச்சு தொழவில்லையா…?”

“நான் அஸர் தொழுகை கிட்டவந்தவுடன் தொழுவுறேன் மகளே. அப்பத்தான்
இரண்டையும் ஒரே ஒழுவில் தொழலாம்…”

இன்னும் சிலர் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்!

“மகளே, நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு கொஞ்சம் கஷ்டம்…
நீங்க சொல்லி நான் செய்தால் உங்களுக்காக செய்யிற மாதிரி இருக்கும். அதனால
எனக்கு எப்ப செய்யனும்னு தோனுதோ அப்ப செய்ய ட்ரை பண்றேன்…”

சகோதர சகோதரிகளே…! இந்த பதில்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்…?

இவையெல்லாம் நியாயமான காரணங்களா? அல்லாஹ் இவற்றை ஏற்றுக் கொள்வானா?

தொழுகை என்ற வணக்கத்தை இவர்கள் சாதாரண ஒரு விஷயமாக பார்க்கின்றார்களா?
அல்லது தாங்கள் செய்யும் நாளாந்த வேலைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்களா?

மிஃராஜின்போது அல்லாஹுத் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு
(நமது சமுகத்துக்கு) வழங்கிய அற்புதமான பரிசே தொழுகையாகும். நம்மைப்
படைத்த அருளாளனுடன் ஐந்து வேளையும் உரையாடும் ஓர் அரிய வாய்ப்பு.
இத்தனைக்கும் மேலாக அது இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையுமாகும். 24
மணி நேரங்களில் நமக்கிருக்கும் அன்றாட வேலைகளில் ஒன்றல்ல தொழுகை.
அதையும்விட முக்ககயமான ஓர் அமல்.

என்ன வேலையாக இருந்தாலும் அதான் கேட்டு விட்டால் இறைவனைத் துதிப்பதற்காக
விரையுங்கள்; பின்னரே உங்கள் வேலைகளைப் பற்றி நினையுங்கள்.

அற்ப காரணங்களுக்காக தொழுகையை விடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.
உண்மையில் நமது வாழ்க்கை முழுவதுமே இபாதத்தாக மாற வேண்டும். ஆனால், நமது
முழு வாழ்விலும் ஓர் இபாதத்தை மேற்கொள்ள நம்மில் அநேகம் பேருக்கு
பொடுபோக்கு. நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

“இறையச்சம் உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு திண்ணமாக தொழுகை ஒரு
பாரமான செயல் தான்.” (அல்குர்ஆன் 2:45)


தொழுகை நமக்கு பாரமாக அமைந்து விட்டால் நமது நிலை என்ன? இறையச்சம் இல்லாத
கூட்டத்தில் அல்லவா நாம் சேர்ந்து விடுவோம்; அல்லாஹ் பாதுகாப்பானாக!

சகோதர சகோதரிகளே! “திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத்
தடுக்கிறது.” (அல்குர்ஆன் 29:45)


எம்மைச் சூழ நடப்பவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். எத்தனைத்
தீமைகள், எத்தனை மானக்கேடான நடத்தைகள்! உயிரோட்டமுள்ள தொழுகை இந்த
சமூகத்தில் இல்லாததும் இதற்கு காரணம்தானே!

“நான் இப்படியெல்லாம் இல்லை” என்று நீங்கள் மட்டும் தப்பித்துக் கொண்டால்
போதுமா? உங்கள் குடும்பம், அயலார், உறவுகள் மற்றும் நமது சமூகத்தின்
செயல்களை அங்கீகரிக்கலாமா?

ஒருபோதும் முடியாது. நம்மையும் நம்மைச் சூழவுள்ள இடத்தையும்
பாதுகாப்பதில் நமக்குப் பங்கு உண்டு. ஒரு முஃமினுடைய கண்குளிர்ச்சியாக
இருக்கவேண்டிய தொழுகையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம்.
நம்மை மட்டுமின்றி நமது சூழலையும், சூழலில் உள்ளவர்களையும் குளிர்ச்சியாக
வைத்துக் கொள்வோம்.

சத்தியத் தூதினை நித்தியமாய் நாம் ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.
இறைவழியில் நம் பயணமும் தொடர வேண்டும். இன்ஷா அல்லாஹ்..!

(இதை படிக்கும் சகோதர, சகோதரிகள் தொழுகை உள்ளிட்ட இபாதத்துகளை உறுதியாக
கடைபிடிக்கவும் முழு வாழ்வையுமே இபாதத்தாய் மாறவும் மீள்பிரசுரித்த
எனக்கும் இதை எழுதிய ஸபானா ஸுஹைப்க்கும் பிராத்திப்பீர்களாக)
நன்றி : அல் ஹஸனாத் / ஸபானா ஸுஹைப்
இத்தனை  சாக்குப் போக்குகளா ?
நன்றி  ..tamilislam -qa .blogspot .com 
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும் !!

No comments:

Post a Comment