கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday 13 January 2015

யார் பொறுப்பாளிகள் ?

அஸ்ஸலாமு அழைக்கும் ! அன்பு முகநூல் சகோதரர்களுக்கு
ஒரு அன்பான வேண்டுகோள் !  யார் பொறுப்பாளிகள் ?  நம்முடைய சில முஸ்லிம் சகோதரிகள் காதலில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களைப் பற்றி விழிப்புணர்வு என்ற பெயரில் சிலர்  நல்லது என்று எண்ணி செய்கிறார்கள் .   சமீபத்தில் ஒரு சகோதரி கேரளாவை சேர்ந்த அந்த பெண் ஒரு மாற்றுமத பையனுடன் காதலில் விழுந்து , இறுதியாக அந்த சகோதரி கொலை செய்யப்பட்டாள். இந்த செய்தியை எல்லோரும் அறிந்தது .  அந்த பெண்ணின் புகைப் படத்தை facebook மற்றும் what 's up மூலமாக போட்டார்கள் .  என்ன நோக்கத்தில் சிலர் அந்த பெண்ணின் புகைப் படத்தை போட்டார்கள் என்றால் மற்ற பெண்கள் கவனமாக இருப்பார்கள் என்ற நோக்கத்தில் தான்.    ஆனால், இந்த அணுகுமுறை சரியா அல்லது தவறா ? என்று அவர்கள் அறியவில்லை , சிந்தித்தும் பார்க்கவில்லை . இப்படி செய்வது சரியான அணுகுமுறை இல்லை . இப்படி இரு சம்பவம் நம் வீட்டில் நடந்தால் நாம் என்ன செய்வோம் ?  எப்படி நடந்துக் கொள்வோம் ?  இப்படி அசிங்கப்படுத்துவமா ?
பாதிக்கப்பட்டவர்கள்தான் இந்த வலியை உணர முடியும் .   அந்த பெண்ணின் பெற்றோர்கள் இதைப் பார்த்தார்கள் என்றால் இன்னும் அவர்களுக்கு மன வேதனை தான் தரும்.  பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர்கள் தான் பொறுப்பாளிகள் !  அவர்கள் தான் விழிப்புடன்  இருக்க வேண்டும் . கண்காணிக்க வேண்டும் . பிள்ளைகளின் விஷயத்தில் கவலைப்பட வேண்டும் . விழிப்புணர்வு என்ற பெயரில் இன்னும் நடக்கும் சில அவலங்களை சொல்லித்தான் ஆக வேண்டும் . facebook  மற்றும் what 's up  மூலமாக சில சகோதரர்கள் தவறான முறையில் சில விடயத்தில்  நடந்துக் கொள்கிறார்கள். இந்த பெண்  இந்த மாற்றுமத பையனுடன் காதல் செய்கிறாள் .  இந்த செய்தியை மற்ற சகோதரர்களுக்கு ஷேர் செய்யுங்கள் என்று இப்படி பல பேர்கள் செய்து வருகிறார்கள் . இது சரியான அணுகுமுறை அல்ல . நம் வீட்டு பெண்கள் செய்தால் நாம் இப்படிதான் செய்வோமா ? அதை எப்படி அணுக வேண்டும் என்று நாம் சிந்திப்போம் . இப்படி புகைப் படத்தைப் போட்டு அசிங்கப்படுத்த மாட்டோம் . அன்பு சகோதரர்களே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் !  விவேகம் தான் முக்கியம் வேகம் அல்ல .   இதற்கு முழு பொறுப்பு பெற்றோர்கள்தான் !
அவர்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால்  , அதற்கு அந்த முஸ்லிம் பொருப்பாளியாகி  இறைவனால் விசாரிக்கப்படுவார் .
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. '' நீங்கள் அனைவரும் பொருப்பாளர்களே !  நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் . [புகாரீ ]

தனது  பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு  விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே . அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார். கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்பு மீறலை சகித்துக்கொள்ள  முடியும்.
சிந்திக்க வேண்டும் அன்பு சகோதரர்களே !
அல்லாஹ்  மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம்  

No comments:

Post a Comment