கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 15 January 2015

அழைத்தும் ஏற்காததேன் ?

அழைத்தும் ஏற்காததேன் ?
ஹஜ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் [ரஹ்] அவர்களிடம் வினவப்பட்டது .  '' அல்லாஹ் என்னை அழையுங்கள் ,, நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் '' எனக் கூறுகின்றான் . நாங்கள் அவனை அழைக்கின்றோம் ,, அவன் எண்களின் வேண்டுதல்களுக்கு  விடையளிக்கவில்லையே! '' அதற்கவர்கள் , 'உங்கள் இதயங்கள் பத்து விஷயங்களால் இறந்துவிட்டன .
1] நீங்கள் அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள் ,, ஆனால் அவனுக்கு குரிய கடமையை நிறைவேற்றுவதில்லை .
2] குர்ஆன் ஷரீஃபை ஓதுகிறீர்கள் ,, அதில் கூறியுள்ளவாறு செயல்படுவதில்லை .
3] இப்லீஸை  [உங்கள்] பகைவன் என்று வாதிக்கிறீர்கள் ,,  ஆனால் அவனைத்  தான் பின்பற்றுகிறீர்கள் .
4] நபி [ஸல்] அவர்கள் மீது அன்பிருப்பதாக  வாதிக்கிறீர்கள் ,, அவர்களின் வழிமுறைகளின்படி நடப்பதில்லை .
5] சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிடுகிறீர்கள் ,, அதற்கென எச்செயலும் செய்வதில்லை.
6] நரகத்தை அஞ்சுவதாக வாதிடுகிறீர்கள் ,, பாவத்தை விட்டும் விலகிட மறுக்கிறீர்கள் .
7] மரணம் ஏற்படுவது உண்மை என்று கூறுகின்றீர்கள் ,, அதற்குரிய ஆயத்தங்களை செய்யாதிருக்கிறீர்கள் .
8] பிறரின் குறைகளை ஆராய்கிறீர்கள் ,, உங்களிலுள்ள குறைகளை விட்டு விடுகிறீர்கள்.
9] அல்லாஹ் அளித்த உணவை உண்கிறீர்கள்,, அவனுக்கு நன்றி செலுத்தாதிருக்கிறீர்கள்.
10] உங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ,, அவர்கள் மூலம் படிப்பினைப் பெறுவதில்லை என்று பதில் அளித்தார்கள் .
சுபுஹானல்லாஹ்  !!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் .
இந்த தளத்தை இன்ஷாஅல்லாஹ் ஒரு முறை சென்று பார்க்கலாமே ! உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிர் செய்யலாம் . அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபைச் செய்வானாக ! ஆமீன் ....  www.islam-bdmhaja.blogspot.com/
இந்த  வாசகம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது . இன்ஷாஅல்லாஹ் உங்களில் நான் முதலில்  பின்பற்றுகிறேன்.  அல்லாஹ்வின் பொருத்தம் தான் நமக்கு  வேண்டும் .  என்னை சிந்திக்க வைத்த தேன்துளிகள் . உண்மை ! உண்மை  ! உண்மை! 

No comments:

Post a Comment