கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 17 January 2015

ஒரு காலம் வரும் !



என் சமுதாயத்தவர்கள் மீது ஒரு காலம் வரும். அது சமயம் அவர்கள் ஐந்தை விரும்பி ஏற்பர் . ஐந்தை வெறுப்பர் .
உலகில் உயிர் வாழ்வதை விரும்புவர் ,, இறந்து படுவதை வெறுப்பர்.

செல்வத்தை விரும்புவர் ,, அது பற்றிய கேள்வி கணக்கை வெறுப்பர்.
உயர்ந்த மாளிகைகளைக்  கட்டுவதனை  விரும்புவர் ,, மண்ணறையை மறந்த விடுவர் .

உலகத்தை விரும்புவர் ! மறுமையை மறந்துவிடுவர் .
படைக்கப்பட்டவற்றை விரும்புவர் ,, படைத்தவனை மறந்துவிடுவர் .

சுவனம் என்னிடமுள்ளது ,, ஆனால், வழிபாடு உன் மூலம் நிகழவேண்டும் .
தெய்வீகத் தன்மை என்னில் உண்டாகும்,, அடிமைத் தனம் உன்னில் நிகழவேண்டும் .
துஆ என்னும் இறைஞ்சுதல் உன்னில் நிகழவேண்டும் ,, அதனை ஒப்புக்கொள்ளுதல் என்னில் நிகழும் .
ஓ! என் அடியானே! சோதனை என் மூலம் நிகழும்,, அதனைப் பொறுத்துக் கொள்வது உன்னில் நிகழவேண்டும்.
உணவு அளிப்பது என்னில் நிகழும்,, நன்றி செலுத்துதல் உன்னில் நிகழவேண்டும்.
மன்னிப்பு என்பது என்னில் நிகழும் ,, மன்னிப்புத் தேடுவது உன் மூலம் நிகழவேண்டும் .

என்னுடைய  'தீன் ' சலாமத் பெறுவது எதிலுள்ளது ?
தீன் சலாமத் பெறுவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ளது.
எனது ஈமானின் ஈடேற்றம் எதிலுள்ளது ?
பொய் , புறம், வீண்பேச்சுக்கள் , தீயவற்றை மொழிதல் ஆகியவற்றை விட்டும் உம்முடைய நாவைப் பேணிக்கொள்ளும் . அதில்தான் உம்முடைய ஈமானின் ஈடேற்றம் உள்ளது.
என் ஆன்மா சலாமத் பெற்றிடவும் தூய்மை பெற்றிடவும் விமோசனம் எதில் உள்ளது ?
உலகத்தின் மீது பேராசை கொள்வதையும் உலகிலுள்ள இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர்த்துக் கொள்வதிலும் இருக்கின்றது .

நற்குணம் படைத்த மனைவி தீன்  என்னும் வீட்டிற்குத் தூண் போன்றவள் ஆவாள் .
வீட்டிற்கும் பரக்கத்தும் ஆவாள்.
கணவனின் வணக்க வழிபாடுகளில் ஆதரவு காட்டுபவளும் ஆவாள்.

ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது.
பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காண முடியாது.
பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது.

No comments:

Post a Comment