கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 29 January 2015

புறம் பேசுவதின் தீமை!

புறம் பேசுவதின் தீமை!

''நான் மிஃராஜ் சென்றிருந்தபோது நரகத்தில் சிலரைக் கண்டேன் ,, அவர்கள் தம் உடலை செம்பால் ஆனா நகங்களால் கீறிக்கொண்டிருந்தார்கள். நான் ஜிப்ரயீல் [அலை] அவர்களிடம் , இவர்கள் யார் ? என வினவினேன் .  ''இவர்கள் தாம் மனிதர்களின் இறைச்சியை தின்பதற்கொப்பான புறம் பேசித் திரிந்தவர்கள் '' என விடையளித்தார்கள் என்பதாக அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .


மனிதர்களைப் பற்றிப் புறம் பேசுகின்றவனுக்கு ஓர் உவமை யாதெனில் , ஒருவன் தன்னுடைய நன்மைகளை எல்லாம் ஒரு கவணில் வைத்து, அவற்றைக் கிழக்கிலும் , மேற்கிலும் எறிபவனுக்கு ஒப்பாகும்.

மறுமை நாளில் அம்மனிதன்  பட்டோலையை அவன் கையில் கொடுக்கப்பட்டதும் , அவன் தனை காண்பான் . உடனே வியப்புற்றவனாக , என்னுடைய தொழுகைகளும் , நான் ஆற்றிய நற்செயல்களும் எங்கே ? என வினவுவான்.

''நீ மற்றவர்களைப் புறம் பேசியதன் காரணமாக  அவையனைத்தும் உன்னால் புறம் பேசப்பட்டவர்களுக்கு [அவர்களின் பட்டோலைக்கு]ப் போய்விட்டன '' என்று வானவர்கள் கூறுவர்.

மேலும், மற்றொரு மனிதன் , '' நான் செய்யாத நற்செயல்கள் பல என் பட்டோலையில் இருக்கின்றனவே . இவ்வளவு நன்மைகள் என் பட்டோலையில்  எவ்வாறு பதிவாயின !.  என்று வியப்புடன் வினவுவான் . அதற்கு வானவர்கள்,  ''நீ அறியாதவாறு  உன்னைப் பற்றிப் பிறர் புறம் பேசினார்கள் . அதன் காரணமாக அவர்களின் நன்மைகளை எடுத்து உன் பட்டோலையில் எழுதப்பட்டு விட்டன என்று விடையளிப்பார்கள்.

ஒரு தீயவனின் தீங்கை விட்டும் மக்களைக் காத்திடும் நோக்கத்தில் அவனின்  தீங்குகளைக் குறித்துப் பேசுவது ஆகும் .

ஒருவனின் தீய செயல் குறித்து அவனின் பெற்றோரிடம் எடுத்துக் கூறி , அவனைத்திருத்தும் நோக்கத்தில் , '' உங்கள் மகன் தீய செயலில் ஈடுபட்டுள்ளான்  ,, எனவே , அவனைத் திருத்துங்கள் '' என்பதாக எடுத்துரைக்கலாம் ,, அது கூடும் .

பெரும் பாவங்களை பகிரங்கமாகத் துணிந்து செய்யும் ஒருவனைப் பற்றி பிறரிடம் எடுத்துரைப்பது கூடும்.

என்ன அன்பு சகோதர /சகோதரிகளே ! நீங்கள் விளங்கிகொண்டீர்களா ? . மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதற்கு முன் உங்கள் நன்மைகளை எண்ணிப்  பாருங்கள் !  நீங்கள் சிரமப்பட்டு செய்த நற்செயல்கள் அவைகளை எண்ணி பாருங்கள் .   நன்மைதானே போனால் போகட்டும் என்று அலட்சியமாக இருக்காதீர்கள் ! மேலே கூறப்பட்ட ஹதீஸை கூர்ந்துக் கவனியுங்கள் !   அல்லாஹ் நம் அனைவரையும் இந்த புறம் பேசுவதின் தீங்கை விட்டு காப்பாற்றுவானாக !!!...
*****************************************
சத்திய பாதை இஸ்லாம் .

No comments:

Post a Comment