கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 February 2015

பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே

ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக்கொண்டிருக்கும்பொழுது
வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய
நடை பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையும்
,காலனியும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம் அந்த
ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாகஇருக்கும் என்றான்.




அந்த சிறுவன் அந்த ஆடைகளை ஒளித்து வைத்து விளையாட முடிவெடுத்து
ஆசிரியரிடம் கூறினான் அதற்கு ஆசிரியார் மற்றவர்களை துன்பப்படுத்தி அதில்
நீ சந்தோசம் காண்பது ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல. விளையாடிற்க்குகூட
மற்றவர்கள் நம்மால் துன்பப் படக்கூடாது என்று ஆசிரியர் கூறினார். நீ
அவர்களிடம் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய் எனவே நான்
சொல்வதைபோல் விளையாடு என்று கூறினார். நீ பணக்கார மாணவன் தானே உண்
கைகளில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை நீ அவர்களுக்கு கொடுக்க மனம்
இருந்தால் அந்த விவசாயியின் பழைய சட்டை பையில் இந்த மோதிரத்தை
வைத்துவிட்டு ஒளிந்திருந்து நடப்பவற்றை பார் என்றார்.



அந்த மாணவனும் அவ்வாறே செய்தான். ஒரு வயதான விவசாயி அவருடைய ஆடையை
எடுத்து அணியும் போது அவருடைய சட்டை பையில் இருந்த மோதிரத்தை கண்டார்
பிறகு சுற்றி சுற்றி பார்த்தார் அவர் கண்களுக்கு யாருமே தென்படவில்லை
உடனே கதரி அழ ஆரம்பித்தார் இறைவனே என் மனைவி நோய்பட்டு வீட்டில்
இருக்கிறாள் அவளை குணப்படுத்த என்ன வழி என்று உண்னிடம் புலம்பினேன் யாரோ
ஒரு நல்லவர் மூலமாக இந்த தங்க மோதிரத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாயே
உணக்கும் இந்த மோத்திரத்தை வைத்துவிட்டு சென்ற அந்த நல்ல மனிதருக்கும்
நன்றி என்று கூறிவிட்டு. என் மனைவியை குணப்படுத்த இது போதும் இறைவா என்று
அந்த முதியவர் அழுதார் அதை பார்த்த அந்த மாணவன் மெய்சிலிர்த்து அவன்
கண்களில் நீர் ஒடியது. ஆசிரியர் மாணவனை பார்த்து நீ சொல்வதுபோல்
செய்திருந்தால் மனவருத்தம்தான் மிஞ்சியிருக்கும் இந்த விளையாட்டால் உன்
மனம் பேரானந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த மாணவனும் இனி என்மனதால் கூட
மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கமாட்டேன் என்று உறுதி கூறினான்.
நன்றி::தமிழ்கடல்
ஆகாயத்தில் அழகிய மாளிகை*****************************************************************************

ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருந்தார்கள் . அக்பர்
தீடிரென்று எனக்கு ஒரு ஆசை , ஆகாயத்தில் ஒரு அழகிய மாளிகை கட்ட வேண்டும்
என்று சொன்னார். பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும்
மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால்
முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான
ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார்
அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி
சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை.
ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய
வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால்.

என்ன பீர்பால்…. நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்!
என்றார்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல
முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கே மூன்று மாதம்
ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார்
பீர்பால்.தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை
கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர்.

பீர்பால் கூறியபடியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக்
கொடுத்து விட்டுச் சென்றான்.வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில்
அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன்
பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர்
சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால்.

மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார்
பீர்பால்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து
விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி
விடலாம்! என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர்
மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச்
சென்றார் மன்னர்.கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார்
பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர்.அரசரைப்
பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா!
சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று
ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது.

அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது.
பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன்.
மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட
பறவைகளினால்தான் முடியும்! கையினால் தான் இவைகள் பேசுகின்றன.
இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால் ஆகாயத்தில் மாளிகை
கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால்.

பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ஆகாயத்தில்
அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம்
என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு
புன்னகைத்தார் மன்னர்.கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு
பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்.
நன்றி::தமிழ்கடல்
ஆகாயத்தில் அழகிய மாளிகை

No comments:

Post a Comment