கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 26 February 2015

நபிகள் [ஸல்] நாயகத்தின் நன்மொழிகள்

நபிகள் [ஸல்] நாயகத்தின் நன்மொழிகள்

*பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.

*உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான். பெற்றோரை வேதனை செய்பவன், எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.


*பெற்றோர் அநியாயம் செய்தாலும் , அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.

*பெற்றோரை மனம் நோகச் செய்து, அவர்கள் அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவமாகும்.

*எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்த வில்லையோ, அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.

*உங்களின் பாவங்களே நோயாகும். அவைகளுக்குரிய மருந்து பாவமன்னிப்பாகும்.

* மது அருந்துபவர்கள் நோயாளி ஆகிவிட்டால், அவர்களின் நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.

*வசதி இல்லாதவன் உங்களிடம் ஏதேனும் கேட்டால், கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள் அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.

* இறைவன் ஒரு மனிதனை அழித்து விட நாடுவானால், அவனிடமிருந்து வெட்கத்தை பறித்து விடுவான்.

*நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஒரு நாள் அவர்கள் விரோதியாகக் கூடும். விரோதிகளை அதிகமாக வெறுக்காதீர்கள். ஒருநாள் அவர்கள் தோழர்களாகக் கூடும்.

* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள்.அன்பளிப்பு கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து  விடுகின்றது.

*அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கிறான். பிரார்த்தனை செய்யும் அடியார்களின் வேண்டுதலை, கைகளை, வெறுங்கையாக விடுவதற்கு வெட்கப்படுகிறான்.

*மறைவாக இருப்பவருக்கு, மறைவாயிருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று விரைவாக இறைவனால் ஒப்புக் கொள்ளக் கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் கிடையாது.

* எவரிடம் மூன்று விசேஷங்கள் உள்ளனவோ அவர் மீது இறைவன் கருணைக் கொள்கிறான். அவை..1] ஏழைகள் மீது இரக்கம் கொள்வது 2]பெற்றோர் மீது பாசம் வைப்பது 3] பணியாளர்களுக்கு உதவி செய்வது.

*பிரார்த்தனையானது முஃமினுக்கு [நம்பிக்கையாளர்] ஆயுதமாகவும், மார்க்கத்திற்கு தூணாகவும் இருக்கும். வானங்கள் பூமி அனைத்திற்கும் பேரொளியாக இருக்கும்.

* பிரார்த்தனையைத் தவிர , வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்த செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது. [திரு நபி ஸல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை, சிக்கல், பயம் உண்டாகும் செயல் நேர்ந்து விட்டால் உடனே தொழுகையின் பக்கம் விரைந்து செல்வார்கள்.]

*எவர் ஒருவர், துன்பத்திற்கு ஆளானவரை நெருங்கி [ஆறுதல்] மனமிரங்கி கூறினால், துன்பத்திற்கு ஆளான அவருடைய நன்மைக்குச் சமமான நன்மை அவருக்கு கிடைக்கும்.

* உங்களில் ஒருவர் அவசரப்படாதிருக்கும் வரை அவருடைய துஆவை நிறைவு செய்யப்படும்.

*உள்ளத்தாலும், கண்களாலும் துன்பத்தை வெளிப்படுத்துவது இறைவனிடம் உள்ளதாகும். கையாளும், நாவினாலும் துன்பத்தைக் காட்டுவது ஷைத்தானின் செயலாகும்.

* என் உம்மத்தார்களில் [பின்பற்றுபவர்கள்] ஒருவரிடம் ஒரு பொற்காசு கேளுங்கள் கொடுக்க மாட்டார். ஒரு வெள்ளிக்காசு கேளுங்கள் கொடுக்க மாட்டார். ஒரு செம்புக் காசைக் கேளுங்கள் அதையும் கொடுப்பதற்குக் கூட மனம் சம்மதிக்காது. ஆனால் அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தைக் கேட்டால் அதைக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறான்.
நன்றி.. அல்ஹாஜ் S .R . ஹமீதுல்லாஹ்-
நன்றி.. நர்கிஸ் 

No comments:

Post a Comment