கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday 3 March 2015

மௌனமாய் ஒரு வெற்றி

மௌனமாய் ஒரு வெற்றி


வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.
இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு
இறங்கினான்.குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டினான். அது உண்பதற்காகப்
புல் போட்டுவிட்டு சத்திரத்திற்குள் நுழைந்தான். அப்பொழுது அங்கிருந்த
குறும்பன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.இதைப்
பார்த்த அவன், “தம்பி இது முரட்டுக் குதிரை. வால் முடியைப் பிடித்து
இழுக்காதே உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும்” என்று எச்சரித்து
விட்டு உள்ளே சென்றான்.ஆனால் அந்தக் குறும்பன் இந்த எச்சரிக்கையை
சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் குதிரையின் வால் முடியைப்
பிடித்து இழுத்தான்.குதிரையால் வலியைப் பொறுக்க முடியவில்லை. விட்டது ஒரு
உதை. அவன் நான்கைந்து குட்டிக்கரணங்கள் போட்டு சிறிது தொலைவில்
விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு அல்லாமல் நல்ல காயமும் அவனுக்கு
ஏற்பட்டது.




இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இங்கு இல்லையா? என்று கூச்சலிட்டான்
அவன். அங்கே கூட்டம் கூடி விட்டது.என் இந்த நிலைக்கு முரட்டுக்
குதிரையின் சொந்தக்காரன்தான் காரணம் என்றான் அவன். தனக்கு இழப்புத்
தொகையோ அல்லது குதிரை உரிமையாளனுக்கு தண்டனையோ தர வேண்டும் என்று
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான்.வழக்கு தொடங்கியது.குதிரை
சொந்தக்காரனைப் பார்த்து நீதிபதி இந்த முரட்டுக் குதிரை உன்னுடையதுதானா?
என்று கேட்டார்.ஆனால் அவனோ ஏதும் பேசவில்லை. ‘உன் குதிரையால்தான்
இவனுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறாய்’
என்று மீண்டும் கேட்டார் நீதிபதி.இப்பொழுதும் அவன் ஒன்றும் பேசவில்லை.
இதைக் கண்ட நீதிபதி ‘இவன் செவிட்டு ஊமை போல் இருக்கிறான். என்ன
கேட்டாலும் பதில் பேசாமல் இருக்கிறான். என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல்
நிற்கிறானே’ என்றார்.



உடனே வழக்கு தொடுத்தவன் ‘என்ன வாயிலே கொழுக்கட்டையா வைத்து இருக்கிறாய்?
இது முரட்டுக் குதிரை. வால் முடியைப் பிடத்து இழுக்காதே. உதைத்தால்
பல்லெல்லாம் போய் விடும் என்று அப்பொழுது கத்தினாயே. இப்பொழுது செவிட்டு
ஊமை போல நடித்து ஏமாற்றவா பார்க்கிறாய்’ என்று போபத்துடன்
கத்தினான்.இதைக் கேட்டதும் நீதிபதிக்கு உண்மை புரிந்தது. வழக்கு
தொடுத்தவனைப் பார்த்து, ‘அவர் எச்சரித்த பிறகும் குதிரையின் வால்
முடியைப் பிடித்து இழுத்தாயா?’ என்று கேட்டார்.அவன் தலை கவிழ்ந்து
நின்றான்.
குதிரையின் சொந்தகாரன், ‘நீதிபதி அவர்களே தங்களுக்கு உண்மை தெரிய
வேண்டும் என்பதற்காகவே ஊமை போல நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’
என்றான்.வழக்கு தொடுத்தவனைக் கடுமையாக்க் கண்டித்து அனுப்பிய நீதிபதி
குதிரை சொந்தக் காரனின் அறிவு கூர்மையைப் பாராட்டினார்.

எல்லாமே நன்மைக்குதான் !!!
முன்னோரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவ்வரசனுக்கு அமைச்சர் உற்ற
துணையாக இருந்து வந்தார்.
ஒருநாள் அரசன் பாக்குவெட்டியால் பாக்கை நறுக்கிக் கொண்டிருக்கும்போது,
அவனுடைய கட்டைவிரல் நசுக்கப்பட்டு இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
அரசன் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர்
உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசன் அமைச்சரைப் பார்த்து எனக்கு நீங்கள் உதவி செய்யாமல் இவ்வாறு
பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கடிந்து கொண்டார். அப்போது
அமைச்சர் அரசனைப் பார்த்து இதுவும் நன்மைக்கே என்று சொன்னார். அரசனுக்கு
கோபம் அதிகரித்து அமைச்சரை சிறையில் அடைத்தார்.

இப்போது என்ன சொல்கிறீர் என்று அரசன் அமைச்சரைப் பார்த்துக் கேட்க
எல்லாம் நன்மைக்கே என்று பதிலுரைத்தார் அமைச்சர். அரசனின் சினம்
தணியவில்லை. அரசன் தன் படையாட்களுடன் காட்டிற்கு வேட்டையாடப்
புறப்பட்டான்.
அரசன் படையுடன் காட்டில் சென்று கொண்டிருந்த போது காட்டுவாசிகள் அவர்களை
புடை சூழ்ந்தனர். காட்டுவாசிகளின் முன்னால் அரசனின் படையாட்கள் போரிட
முடியாமல் ஓட ஆரம்பித்தனர்.

எஞ்சியிருந்த அரசனை காட்டுவாசிகள் சிறைபிடித்தனர். பிடிபட்ட அவ்வரசனை
காட்டுவாசிகள் தங்கள் தலைவரிடம் ஒப்படைத்தனர். தலைவர் மிக்க
மகிழ்ச்சியடைந்து, நம் குலதெய்வத்திற்கு பலியிட சரியான ஆளை பிடித்து
வந்திருக்கிறீர்கள். இவனை நம்குல தெய்வத்திற்கு முன்னாலுள்ள பலிபீடத்தின்
கம்பத்தில் கட்டுங்கள் என்று தம் ஆட்களுக்கு உத்தரவிட்டார்.

அவர்களும் அரசனை பலிபீடத்திலுள்ள கம்பத்தில் கட்டினர். அதோடு
மட்டுமல்லாமல் அரசனின் இரண்டு பக்கங்களில் அரிவாளுடன் கூடிய இரண்டு
மல்லர்கள் நிறுத்தப்பட்டனர்.காட்டுத்தலைவனின் உத்தரவு அறிவிப்பு
கிடைத்தவுடன் அரசனுடைய தலையை துண்டிப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.

காட்டுதலைவன் உரிய நேரம் வந்தவுடன் அரசனை வெட்ட தனது வலக்கையை
உயர்த்தும்போது, அரசனின் கட்டை விரல் வெட்டுண்டதைப் பார்த்து
நிறுத்துங்கள் என்று மல்லர்களுக்கு உத்தரவிட்டார். அரசனை கட்டவிழ்த்து
விடுதலை செய்தார். இவருடைய கை ஏற்கனவே வெட்டுண்டு பின்னப்பட்டு விட்டது.
இவரை பலி கொடுத்தால் நம் குலதெய்வம் ஏற்றுக் கொள்ளது. தெய்வ நித்தனை
ஏற்படும் என்று தம் ஆதிவாசிகளுக்கு தெரிவித்தனர்.

விடுதலைபெற்ற அரசன் அமைச்சரைப் பற்றி சிந்தனை செய்து கொண்டு அரண்மனையை
வந்தடைந்தான்.அரசன் அமைச்சரைப் பார்த்து நடந்த விஷயங்களைப் பற்றி சொல்லி
தாங்கள் என்னுடன் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேட்க,
அமைச்சர் காட்டுவாசிகளிடம் தான் சிக்கி குல தெய்வத்திற்கு
பலியிடப்பட்டிருப்ப்பேன் என்று பதிலளித்தார்.
அமைச்சர் கூறிய எல்லாம் நன்மைக்கே என்ற வார்த்தையின் உட்பொருள் அரசனுக்கு
பின்னால் தான் விளங்கியது.

No comments:

Post a Comment