கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Monday 16 March 2015

கற்றுக் கொண்ட பாடம்

மன்னனுக்கு திடீரென ஒரு ஆசை. சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து
சென்றால் எத்தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்து
கொள்ள ஆசை.

உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு தனது மெய்க் காப்பாளனை உடன் அழைத்துக்
கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார். மெய்க்காப்பாளன் முன்னே செல்ல
சிறிது இடைவெளியில் மன்னர் பின்னே நடந்து சென்றார்.

வீதியில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக் கண்டு புன் முறுவல்
பூத்தவாறு சென்றனர். மன்னனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. மன்னனுக்கு
மெய்க் காப்பாளனுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்சரியம்,
மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான
கோபம்.அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார், ''என்ன உனக்கு நாட்டில்
எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே, அவ்வளவு செல்வாக்கா,உனக்கு?''

அவன் சொன்னான், ''மன்னா,எனக்கு இவர்கள் யாரையும் முன்னேபின்னே
தெரியாது.''   மன்னன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து அவன்
சொன்னான்.   ''மன்னா, நான் சாலையில் நடக்கும்போது எதிரில் வரும் யாரைப்
பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன்.
அப்போது எதிரில் வருபவன் எப்படிப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு
கட்டாயம் புன்முறுவல் பூப்பான். இப்போதும் அப்படித்தான் நடந்தது.
''மன்னன் அன்று தனது மெய்க் காப்பாளனிடம் நல்லதொரு பாடம் கற்றுக்
கொண்டான்.   அதுபோலவே நாமும் ... :)
கற்றுக் கொண்ட பாடம் 

No comments:

Post a Comment