கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 March 2015

அறிவே ஆயிதம் [சிறுகதை]

ராமுவும், சோமுவும் நண்பர்கள். பக்கத்து நகரத்தில் நடந்த திருவிழாவுக்கு புறப்பட்டுப் போனார்கள்.

சோமு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தான். ராமு திருவிழா கூட்டத்தில் வியாபாரம் செய்ய சென்றான். வணிகம் செய்யத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நிறைய பணத்தை, பொட்டலமாக கட்டி எடுத்துச் சென்றான் ராமு.


வாகன வசதி இல்லாத காலமது. நடைபயணமாகவே இருவரும் புறப்பட்டனர்.

நண்பர்கள் சோமுவும், ராமுவும் பொழுது சாயும் வேளையில் ஒரு கிராமத்தை அடைந்தனர். “இன்னும் பல மைல் தூரம் நடக்கணும். எப்படியும் இரவுக்குள் போய்ச் சேர முடியாது. இந்த கிராமத்துல தங்கிவிட்டு காலையில எழுந்து பயணத்தை தொடருவோம்” என்றான் சோமு.

ராமுவோ அதற்கு உடன்படவில்லை, “வேண்டாம் சோமு. இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம், அடுத்து ஏதாவது கிராமம் வந்தால் தங்கிக் கொள்வோம்” என்றான்.

“கொஞ்ச தொலைவு போனால், பெரிய காடு குறுக்கிடும். நாம் காட்டைக் கடக்கும் முன் இரவாகிவிட்டால் வழிப்பறி திருடர்கள் உலாவுவார்கள். நாம் இங்கேயே தங்கிவிடுவது நம் உடமைகளுக்கு பாதுகாப்பு” என்று சோமு உரிமையோடு மறுத்தான்.

“உனக்கென்னப்பா நீ பேச்சாளன், மேடையேறி ரெண்டுமணி நேரம் பேசினால் உனக்கு காசு கையில வந்திடும். நான் வியாபாரி, சீக்கிரம் போய் நிறைய சரக்கு வாங்கி வச்சி, காலை முதல் இரவு வரை கண்பூக்க காத்துக்கிடந்தால் தான் காசைப் பார்க்க முடியும். அதனால எவ்வளவு தூரம் போக முடியுமோ போகப்போறேன். என்னோட நடையக்கட்டு” ராமு, அதிகாரம் செய்தான்.

வேறு வழியில்லாமல் சோமு, ராமுவுடன் நடையைத் தொடர்ந்தான். இருள் சூழ்ந்து கொண்டது. காட்டிற்குள் சென்று கொண்டிருந்தனர். இனி சாப்பிட்டு ஓய்வெடுத்து விட்டு பயணம் செய்யலாம் என்று நினைத்தவர்கள் ஒரு மரத்தடியில் ஒதுங்கினர்.

ராமு, பண மூட்டையை தலைக்குப் பக்கத்தில் வைத்து விட்டு படுத்து தூங்கினான். சோமு, தனது மூட்டையை அருகில் இருந்த மரப்பொந்தில் வைத்து இலை தழையால் மூடிவைத்துவிட்டு உறங்கச் சென்றான்.

நள்ளிரவில் திருடர்கள் அவர்களை எழுப்பினர். இருக்கிற பொருட்களை எல்லாம் கொடுத்து விடுங்கள் என்று மிரட்டினர்.

ராமு மூட்டையை கொடுக்க மனமில்லாமல் அடம் பிடித்தான். திருடர்கள் அவனை ஓங்கி அறைந்து விட்டு, மூட்டையை பிடுங்கிக் கொண்டனர்.

ராமு தன் தலையின் மீது கை வைத்து, “நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணமெல்லாம் போச்சே…” என்று அழ ஆரம்பித்தான்.

சோமு, அவனைத் தேற்றினான். “நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? இப்போ அழுது என்ன பிரயோஜனம். எப்போதும் புத்திக்கு வேலை கொடுக்கணும்” என்று பேசியபடி மரப்பொந்தில் இருந்த மூட்டையை எடுத்துக் கொடுத்தான். மேலும் பேசிய சோமு, “ம்… சரி பார்த்துக் கொள். இதுதான் உன் பணமூட்டை. திருடர்கள் நான் வைத்திருந்த மாற்றுத் துணிமணிகள் அடங்கிய பொட்டலத்தை தூக்கிக் கொண்டு போய் விட்டனர்” என்றான்.

”சோமு உன் பேச்சைக் கேட்காதது என் தப்புதான். எனக்கு கல்வி அறிவு அவ்வளவா இல்லப்பா. என் பணம், அதிகாரம் எல்லாம் உன் அறிவுக்கு முன் தூசு என்பதை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று மன்னிப்பு கேட்டான் ராமு.
அறிவே ஆயிதம்  [சிறுகதை]நன்றி..R .வனிதா 

No comments:

Post a Comment