கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 March 2015

அச்சம் தவிர் [சிறுகதை ]

கிள்ளியும், வளவனும் மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள். அன்று பள்ளியில் விழா. வழக்கத்தை விட தாமதமாக பள்ளி முடிந்து காட்டு வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

“கிள்ளி, விளையாட்டு விழாவால் நேரமாகிவிட்டது. இருள் வேறு சூழ்ந்து வருகிறது. எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் வளவன்.


“வளவா, ‘அச்சம் தவிர்’ன்னு நீ படிக்கவில்லையா?, அச்சம்தான் நம்மை கோழையாக்கும் அங்குசம். எதற்கும் அஞ்சக்கூடாது” என்று தைரியம் ஊட்டி அழைத்துச் சென்றான் கிள்ளி.

மலைமீதுள்ள தேயிலைத் தோட்டத்தில்தான் இவர்களது பெற்றோர் வேலை பார்க்கிறார்கள். உணவைத் தேடி யானை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் அடிக்கடி அங்கு வரும். இவைகளால் பலமுறை உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அது வளவனுக்கும், கிள்ளிக்கும் தெரியும். அதனால் தான் வளவன் பயந்துப் போய் காணப்பட்டான்.

மேட்டுப் பகுதியில் இருவரும் நடந்துக் கொண்டிருந்தனர். இரு பக்கமும் சரிவாக இருந்தது.

அப்போது அவர்களுக்கு எதிரே மூன்று யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களை நோக்கி வந்தன.

இதைக்கண்ட வளவனுக்கு நடுக்கம் ஆரம்பித்துவிட்டது. பயத்தில் அலறினான்.

“வளவா, கத்தாதே. யானைகள் இன்னும் நம்மை கவனிக்கவில்லை. நீ சத்தம் போட்டால் நாம் தொலைந்தோம். நாம் தப்ப வேண்டும் என்றால், இந்த சரிவில் உருண்டுவிடுவதுதான் சரியான வழி” என்று கிள்ளி ஆலோசனை சொன்னான்.

பயத்தில் நடுங்கிய வளவன், “இந்தப் பள்ளத்தில் உருண்டால் பிழைக்க முடியுமா?” என்றான் இன்னும் பதறியபடி.

“யானைகளிடம் அகப்பட்டால் உயிர் போய்விடும். சரிவில் உருண்டால் காயத்துடன் பிழைக்கலாம். பயப்படாமல் புரள் வளவா?” என்றபடி உருண்டான் கிள்ளி.

யானைக்கும் பயந்து, உருளவும் பயந்து வளவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, பயந்துக் கொண்டே சரிவில் காலை வைத்தான், சரசரவென உருண்டு கீழே வந்துவிட்டான்.

இருபது, முப்பது அடி சரிவில் உருண்டதில் அவர்களுக்கு உடலில் அங்கங்கே சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தது.

யானைகள், இவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்துச் சென்றன.

“சிறு காயங்களோடு நாம் உயிர் தப்பினோம். உன் சமயோசனை புத்தியே புத்தி” என்றான் வளவன்.

“வளவா! ஆபத்தான நேரங்களில் முதலில் மனதை தளரவிடக் கூடாது. கடைசி வரை தப்பிக்கவே போராட வேண்டும். அச்சம் தவிர்க்க வேண்டும். யானைகள் சரிவில் இறங்காது. நாமும் சரிவில் உருளாமல் நின்றிருந்தால், யானைகள் நம்மைப் பார்த்திருக்கும். நாம் அவற்றின் பாதையில் குறுக்கிடாததால், அவை நமது பாதையில் குறுக்கிடவில்லை. நம் காயங்கள் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். கவலைப்படாதே வா” என்ற கிள்ளி, வளவனை அழைத்துக் கொண்டு மற்றொரு பாதையில் சென்றான்.
அச்சம் தவிர் [சிறுகதை ]

1 comment: