கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 28 March 2015

உபதேசம் [சிறுகதை]

பரம குருவிடம் பாடம் பயில சீடர்கள் குருகுலத்தில் சேர்ந்திருந்தனர்.

இவர்களோடு மன்னர் மகன் மாமல்லனும் படித்து வந்தான். மன்னர் மகன் என்பதால் நிறைய குறும்புகள் செய்வான்.

குரு எவ்வளவு எச்சரித்தும் அவன் தன் குறும்பை விடவில்லை.


அன்று குரு திருக்குறள் நடத்திக் கொண்டிருந்தார். ‘விருந்தினர் பசியோடு வெளியே இருந்தால், ஒருவர் நீண்ட நாள் உயிர்வாழும் அமுதமாக இருந்தாலும் தான் மட்டும் உண்ணக்கூடாது. அவரையும் அழைத்து உண்ண வேண்டும்.

அதே போல் இனிமையான சொற்களையே நாம் அனைவரிடமும் பேச வேண்டும். கடுஞ்சொற்களால் பேசுவது சுவையான பழங்கள் இருக்க புளிப்பான பழங்களை உண்பதற்குச் சமம்.

தனக்குத் துன்பம் செய்தவனை தண்டிப்பதை விட அவன் வெட்கப்படும்படி நல்லது செய்துவிட வேண்டும். அதுவே அவனை ஒழுங்குபடுத்தும். அதாவது தீயவனையும் அன்பினாலேயே தான் திருத்த வேண்டும்’ என்று குறள்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மரத்தில் இருந்து அப்போது புழு ஒன்று கீழே விழுந்தது.

அதை எடுத்து அருகில் இருந்தவன் உடைக்குள் போட்டன் மாமல்லன்.

அந்த மாணவன் அலறி உடையைக் கலைத்தான். புழு கீழே விழுந்தது.

மாமல்லன் இதைச் செய்ததை அறிந்து குரு கோபமடைந்தார். ‘இன்று முழுவதும் உனக்கு உணவு கிடையாது. இந்த மரத்தடியில் தான் பொழுது விடியும் வரை படுக்க வேண்டிம். இது தான் உனக்கு தண்டனை’ என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.

மகேந்திரன் குருகுலத்தில் தலைமைச் சீடன். மாமல்லன் பசியால் துடிப்பதை அவன் கண்டான். குளிரால் வாடுவதைப் பார்த்து பரிதாபப்பட்டான்.

தன் உணவையும், போர்வையையும் மகேந்திரன், மாமல்லனுக்கு கொடுத்து உதவினான்.

குருவுக்கு விஷயம் தெரிந்தது.

மகேந்திரனை அழைத்து விசாரித்தார். அவன் மாமல்லனுக்கு உதவியதை ஒத்துக் கொண்டான்.

‘இது குரு சொல்லை மீறிய செயல் அல்லவா?’ – குரு கண்டித்தார்.

“குருவே! உங்கள் அறிவுரைப்படிதான் இவனுக்கு உதவினேன். நீங்கள் தானே நேற்று நிறைய திருக்குறளுக்கு பொருள் கூறினீர்கள்.

அப்போது ‘தீயவனையும் அன்பினால்தான் திருத்த வேண்டும்’, ‘ஒருவரை பட்டினி போட்டு விட்டு நாம் சாவா மருந்தெனினும் உண்ணக் கூடாது’ என்று சொன்னீர்களே? நீங்கள் கூறியபடி தானே நான் நடந்து கொண்டேன்.

ஒருவனை பட்டினி போட்டு, நடுங்கும் பனியில் படுக்க வைத்திருப்பது, உண்மையில் அவனைத் திருத்திவிடுமா? இது வன்மத்தை தானே வளர்க்கும். பாலைவனத்தில் எளிதில் நடக்க முடியாது? அதுபோல பக்குவப்படாத மனங்களையும் எளிதில் மாற்றிவிட முடியாது. கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் மாற்ற முடியும். குறும்புக்கார மாமல்லனையும் அன்பினால் திருத்த வேண்டும். ஆணவத்தால் அடக்கி விட முடியாது” என்றான்.

இதைக் கேட்ட குரு வெட்கப்பட்டார்.

சிறந்த குணம் படைத்த மாணவன், தனக்குக் கிடைத்த பெருமையில் அவனை அப்படியே கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டார்.

உபதேசம் [சிறுகதை]
நன்றி.. R .வனிதா 

No comments:

Post a Comment