கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 23 November 2023

குருவும், சீடனும்

 




குருவும், சீடனும்


குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான், சீடன், உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததை, இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா! என்று குரு அவனிடம் சொன்னார். 


அவன் பட்டாம் பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால், அவனால் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். 


சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பிடிக்கத் சென்ற பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. அப்போது குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார். இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதை விட, நாம் வாழ்க்கையை அமைதியாக ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் என்றார். 




சீடனின் சந்தேகம்


சீடன் ஒருவன் தன் குருவிடம், குருவே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? என்றுக் கேட்டான். அதற்கு குரு புன்னகைத்தவாறே அவனிடம் ஒரு கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். 


இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி. சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது. அதிலிருந்து விடுபட பல முயற்சிகளைக் கையாண்டான். ஆனால் அது அவனுக்கு பலன் அளிக்க வில்லை. 


தன்னை மறந்து ஒரு வினாடி கண்ணயர்ந்தான். கண்ணாடி கீழே விழுந்து சிதறியது. பதறிப்போன சீடன் கலவரத்துடன் குருவை பார்த்தான். பயப்படாதே சீடனே நீ ஒரு வினாடி கண் அயர்ந்ததால் உன் பொறுப்பில் இருந்த கண்ணாடி சின்னாபின்னமாகி விட்டது. 


இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும்? என்று யோசித்துப் பார் என்று கூறியதும் சீடனின் சந்தேகம் தெளிவானாது. 




உன்னில் இறைவன்


இறைவனைக் காண ஆவல்கொண்ட ஒருவன் குருவைத் தேடிச் சென்று, தன் ஆசையைக் கூறினான். அதற்கு குரு, முதலில் நீ உன்னை கண்டுகொள். அதன் பின்பு நீ இறைவனைக் காண்பாய் என்றார். என்னை எப்படி நான் அறிவது கொள்வது என்று குருவிடம் அவன் கேட்டான். அதற்கு அவர் எதிரில் தெரியும் குளத்தில் போய் உன் உருவத்தைப்பார் என்றார். அவன் அங்கு சென்றபோது, குளத்தில் எருமைகள் நீந்திக் கொண்டிருந்தன. 


அந்த குளத்தண்ணீர்ரும் கலங்கலாக இருந்தது. குளத்தில் அவனது உருவத்தை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மீண்டும் குருவிடம் சென்று கூறினான். அதற்கு குரு மதியம் சென்று பார் என்றார். அவனும் உச்சி வேளையில் குளத்துக்குச் சென்று பார்த்தான். அப்போது எருமைகள் இல்லை. 


குளத்து நீர் தௌ்ளத் தெளிவாக இருந்தது. குளத்தை எட்டிப் பார்த்தான். அவனால் அவனது உருவத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனும் நடந்ததைக் கூறினான். அதன் பின்பு குரு கூறினார், காலையில் உனது உள்ளம் கலங்கிக் கிடந்தது. 


அதனால் அதில் உன்னை நீ பார்க்க முடியவில்லை. மதியம் நீ பார்த்த குளம் தெளிவான நீரைபார்த்தாய் இதே போலத்தான் உனது மனம் இருக்கவேண்டும். இப்படி இருந்தாள், அதில் உன்னையும் பார்ப்பாய், இறைவனையும் பார்ப்பாய் என்றார், குரு. 









No comments:

Post a Comment