கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 29 November 2014

பொய்

ஊரில் பெரிய திருடன் அவன். ஆனால் அவன் திருடன் என்று யாருக்கும் தெரியாது. பகலில் நல்லவன் போல இருப்பான். இரவில் திருடச் செல்வான்.
இறைத்தூதர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை திருடன் அறிந்தான்.

Monday 24 November 2014

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.
தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

Friday 21 November 2014

இப்படியும் செய்யலாம்/உதவலாம்.

உயர்ந்த மாடிக்கட்டிடம். சுட்டெரிக்கும் வெயிலில், கயிற்றில் தொங்கும் இயந்திரத்தில் நின்று கொண்டு 2 பேர் வெளியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக் கண்ணாடிகளையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் நாளாந்த கடினமான வேலை. அந்த வேலை முடியும் வரை பாத்ரூம் கூட செல்ல முடியாது

இவ்வாறு துடைத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஜன்னல் திறக்கிறது. ஒரு சிறுமி கையில் பாத்திரம் நிறைய குளிர்பானத்தோடு, அங்கிள் ரொம்ப டயர்டா இருப்பீங்க அம்மா தந்தாங்க குடிங்க.. என்று நீட்ட. அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருவர் கண்களும் குளம் ஆகியது. கொடுக்கும் காசுக்கு ஒழுங்கா வேலை செய்யு என்று திமிரான குரல்களையே கேட்ட அவர்களுக்கு, எதிர்பாராமல் கிடைத்த இந்த கவனிப்பும் அன்பும் 1000 கோடிக்கு சமம். ஆயிரக் கணக்கில் செலவு செய்து கொடுக்கும் விருந்தில் கிடைக்கும் திருப்தியை விட, இந்த உள்ளங்கள் அந்த கணம் கேட்கும் துஆக்கள் நமது பல கஷ்டங்களை தவிடு பொடியாக்கிவிடும்

Monday 17 November 2014

வெற்றிக்கு பத்து வழி

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

Saturday 15 November 2014

கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன் ?

கேள்வி:
ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்?

Friday 14 November 2014

சிறு கதைகள்

ஒரு காலத்தில் பாட்டிமார்கள் அவர்களுடைய பேரன் குழைந்தைகளுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த குழந்தைகள் கதைகளை கேட்டுக் கொண்டே தூங்கிவிடும் . ஆனால், இப்பொழுது பாட்டிமார்கள் டிவி சீரியல் பார்க்கிறார்கள். பிள்ளைகள் செல் போனில் அல்லது tab வைத்து விளையாடுகிறார்கள் .

Sunday 9 November 2014

இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும்

குடும்பம் என்பது ஒரு மனித சமூகக் கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பி னர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பனவற்றால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உரிமைகளும் கடமைகளும் மதத்தினால் ஏற்படுத்தப்பட்டு சட்டத்தினால் அமுல் நடத்தப்பட்டு குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களினால் கடைப்பிடிக் கப்பட்டிருக்கின்றன.

குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், பரஸ்பரம் அன்பு பாராட்டுதல், இளைஞர்களிடம் அன்பு காட்டுதல், முதியவர்களுக்கு மரியாதை செய்தல், குடும்பம் சுமுகமாக நடத்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளாகும்.

Saturday 8 November 2014

செல்வந்தரின் மரணம்

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார் அவர் நல்ல அறிஞரும் கூட, தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகாமையில் அழைத்தார். மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார் :
என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?" என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான் மகன்.
அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை" ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான். அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது.

உடலில் உற்சாகம் பெருக- ஹிமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.